எனக்கு சொல்லிக் கொடுத்ததை அவருக்கும் சொல்லிக் கொடுங்கள். ராகுல் டிராவிட்டுக்கு பீட்டர்சன் கோரிக்கை!
ஐதராபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான கட்டத்த நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்கள்க்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களைக் கைப்பற்றினர்.
அதன் பின்னர் ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 7 விக்கெட்களை இழந்து 421 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் சுப்மன் கில் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 10 இன்னிங்ஸ்களாக மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கும் ஷுப்மன் கில் இன்னும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்நிலையில் ஷுப்மன் கில் அவுட்டான போது வர்ணனை செய்த கெவின் பீட்டர்சன் “இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கில்லுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். எனக்கு எப்படி ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாட வேண்டும் என அவர் சொல்லிக் கொடுத்து என்னுடைய அணுகுமுறையை மாற்றினாரோ அதுபோல கில்லிடமும் அவர் பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.