#BIG BREAKING : சாலையில் நாற்காலி போட்டு ஆளுநர் போராட்டம்..!
ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. இந்நிலையில், கேரளாவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அறிக்கையை வாசிப்பது ஆளுநராக இருந்தாலும், அதை தயாரித்து கொடுப்பது மாநில அரசுதான். அந்த வகையில், மாநில அரசின் கொள்கை அறிவிப்பு அறிக்கையை வாசிக்க தொடங்கி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், வெறும் 1.17 நிமிடத்தில் வாசித்து முடித்துவிட்டார். அதாவது முழுமையாக வாசிக்காமல் கடைசி பக்கத்தை மட்டும் வாசித்து முடித்துவிட்டார்.
இதனால் சட்டமன்ற உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் ஆளுநரின் பல்வேறு கருத்துக்கள் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், கேரள ஆளுநர் கொல்லம் அருகே சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. SFI அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியதை பார்த்து கொந்தளித்த ஆளுநர், மாணவர்களின் போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டி, தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். ஒரு மாநிலத்தின் ஆளுநரே நடுரோட்டில் போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறை.