தினம் ஒரு உருண்டை சாப்பிட்டா போதும்! ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராது!
80 வயதிலும் 20போல் நல்ல ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டுமா? எந்தவித நோயுமின்றி, கை-கால் வலி, மூட்டு வலி, சோர்வு, உடல் அசதி, கண் பார்வை குறைபாடு, இரும்புச்சத்து, கால்சியம் சத்து குறைபாடு, ரத்த சோகை இல்லாமல் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு எளிதாக செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் என்ன தெரியுமா?
சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த உருண்டை அல்லது லட்டு இதை தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
இதை சுலபமாக செய்ய முடியும். இதை செய்து வைத்துக்கொண்டால் தினமும் சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளலாம். தினமும் மாலை வேளைகளில் எடுத்து சாப்பிட உகந்தது.
தேவையான பொருட்கள்
கொப்பரை தேங்காய் – 1
(நாட்டு மருந்து கடைகளில் எளிமையாக கிடைகக்கக்கூடிய ஒன்று. அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது மூளை நரம்புகளுக்கு வலு கொடுக்கக்கூடியது. ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடியது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கக்கூடியது. நல்ல கொழுப்பை சேரவைக்கும். ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்யும். புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. ஆர்த்தரட்டிஸ், மூட்டு வலி போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அனீமியாவை விரட்டியடிக்கும். கண் பார்வை திறனை அதிகரிக்கச்செய்யும். நரம்புகளுக்கு நல்ல வலு சேர்க்கும். ஆண்கள் சாப்பிடுவது நல்லது. ஆண்மைத்திறனை அதிகரிக்க உதவும்)
இந்த கொப்பரை தேங்காயை குட்டி, குட்டியாக நறுக்கி ஒரு கடாயில் சேர்த்து நன்றாக வறுத்து, நிறம் மாறி வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். (கொப்பரை தேங்காயை ஸ்டோர் செய்ய விரும்பினால், அதை நீங்கள் ஃப்ரீசரில் வைக்க வேண்டும்)
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
கொப்பரை தேங்காய் வறுத்து எடுத்த அதே கடாயில் சேர்த்து வேர்க்கடலையையும் வறுத்துக்கொள்ள வேண்டும்.
(இதில் எண்ணற்ற புரதச்சத்துக்கள் உள்ளது. முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றைவிட ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. நோயின்றி ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவக்கூடியது)
எள் – ஒரு கப் (100 கிராம்)
ஏலக்காய் – 2
வெல்லம் – அரை கப்
உப்பு – ஒரு சிட்டிகை
எள்ளையும் அதே கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். எள் உடனடியாக வறுபட்டுவிடும். அதையும் எள்ளுடன் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
ஏலக்காய் உணவுப்பொருளுக்கு நல்ல நறுமணத்துடன், ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும் கொடுக்கக்கூடியது.
எள்ளில் அதிகளவில் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் குறைபாடு நிறைந்தவர்கள் இந்த எள்ளை எடுத்துக்கொள்வது நல்லது. கருப்பு எள்ளையும் எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் குழந்தைகள் சிலர் கருப்பு எள்ளை விரும்பி சாப்பிடமாட்டார்கள். எனவே வெள்ளை எள் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கருப்பு எள் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் இடுப்பு வலி, கழுத்து வலி, எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்ற பிரச்னைகள், முடி உதிர்வு ஆகிய பிரச்னைகளும் இருக்கவே இருக்காது. அனைத்தையும் அறவே விரட்டிவிடும்.
அனைத்தையும் வறுத்து, நன்றாக ஆறவைத்து, காய்ந்த ஈரமில்லாத ஒரு மிக்ஸி ஜாரில் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும்.
முதலில் கொப்பரை தேங்காயை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் எள், கடலை, வெல்லம் என தனித்தனியாக பொடித்துக்கொள்ள வேண்டும்.