#BIG NEWS : காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி உறுதியானது…!
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் முதல்வர் மமதா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் களத்திலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
இதனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் அதிகபட்சமாக 4 தொகுதிகளை ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முன்வந்தது. இந்த 4 தொகுதிகளில் 1 அல்லது 2-ல் தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இம்முடிவை மமதா பானர்ஜி எடுத்திருந்தார். ஆனால் நாங்க பெரிய கட்சி.. எங்களுக்கு 10 சீட் தர வேண்டும் முரண்டுபிடித்தது காங்கிரஸ். இதனால் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக மமதா பானர்ஜி அறிவித்தார். இதேபோலாதான் பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மியிடம் அதீதமான தொகுதி பேரம் நடத்தியது காங்கிரஸ். மமதா பானர்ஜியின் அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸுடன் உறவை முறித்து கொள்வதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி உறுதியானது.. இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடும் என அகிலேஷ் அறிவிப்பு. வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“உத்தரப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் 11 தொகுதிகளில் காங்கிரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது;11 தொகுதிகளில் உடன்பாடு எட்டியதை போலவே எஞ்சிய தொகுதிகளிலும் சுமூக உடன்பாடு எட்டப்படும் என நம்பிக்கை உள்ளது;பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுக்கப்படும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.