பசலைக்கீரை பூரி : இப்படி செய்யுங்க: செம்ம ஹெல்தி ரெசிபி
தேவையான பொருட்கள்
கோது மாவு – 2 கப்
பசலைக்கீரை – 2 கட்டு
சீரகத்தூள்- கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
சர்க்கரை – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை : பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஆறிய பிறகு விழுதாக அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து மாவாக பிசைந்து கொள்ளவும். தற்போது பூரிகளாக மாற்றி சுட்டு எடுக்கவும்.