கிச்சன் கீர்த்தனா: சேமியா கருப்பட்டி லட்டு
இந்த நிலையில் சேமியாவைப் பயன்படுத்தி கருப்பட்டி லட்டு செய்து இந்த வீக் எண்டை ஸ்வீட்டாகக் கொண்டாடலாம்.
என்ன தேவை?
சேமியா – ஒரு கப்
கருப்பட்டிக் கரைசல் – ஒரு கப்
பேரீச்சம்பழம் – ஒரு கப்
முந்திரிப்பருப்பு – ஒரு கப்
வேர்க்கடலை – ஒரு கப்
நெய் – சிறிதளவு
நறுக்கிய முந்திரிப்பழம் – சில துண்டுகள்
ஏலக்காய், தேங்காய்த்துருவல் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிறிதளவு தண்ணீரில் சேமியாவை வேகவைத்து எடுத்து உலர வைக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, முந்திரிப்பழம், வேர்க்கடலை, பேரீச்சம்பழம் இவற்றை வறுத்து எடுக்கவும். சிறிதளவு நெய்யில் தேங்காய்த்துருவலைப் பொன்னிறமாக வறுத்து, அதில் கருப்பட்டிக் கரைசலை வடித்து ஊற்றி நன்கு வதங்கியவுடன், அந்தக் கரைசலில் சேமியாவைப் போட்டு, நன்கு கிளறி, பிறகு அதில் மிக்ஸியில் வேர்க்கடலையை ஒரு சுற்றி அதையும் முந்திரிப்பருப்பு, பேரீச்சம்பழம், ஏலக்காய் போட்டு இறக்கவும். ஆறிய பிறகு, அதை உருண்டையாகப் பிடித்துப் பரிமாறவும்.