புரத சத்து நிறைந்த சட்னி : அம்புட்டு ருசியா இருக்கும்
கருப்பு உளுந்து சட்னி, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கால் டம்ளர் கருப்பு உளுந்து
2 ஸ்பூன் எண்ணெய்
4 பல் பூண்டு
அரை ஸ்பூன் சீரகம்
கொஞ்சம் வெந்தயம்
காய்ந்த மிளகாய் 4
1 வெங்காயம் நறுக்கியது
1 தக்காளி நறுக்கியது
புளி கொஞ்சம்
பெருங்காயம் கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்தை சேர்த்து வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம்,வர மிளகாய், வெந்தம், பூண்டு சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெங்காயம், தக்காளி, புளி சேர்த்து கிளரவும். பெருங்காயம், உப்பு சேர்த்து கிளரவும். இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும்.