ரொம்ப கம்மி விலை தான்.. வெறும் ரூ.80 ஆயிரத்தில் அதிக மைலேஜ் கொண்ட பைக்குகள் இவைதான்..
டிவிஎஸ் ஸ்போர்ட் அதிக மைலேஜ் கொடுப்பதில் பிரபலமானது. இந்த அருமையான பைக் ஒரு லிட்டர் பெட்ரோலில் 70 கி.மீ. இந்தியாவில் இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.59,431.
Best Mileage Bikes
அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கும் உள்ளது. பஜாஜின் இந்த சிறந்த பைக் லிட்டருக்கு 75 கிமீ மைலேஜ் தரும். விலை பற்றி பார்க்கும்போது, இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.67,808 முதல் தொடங்குகிறது
Hero HF Deluxe
ஹீரோ மோட்டோகார்ப் பைக்குகள் மலிவானவை மட்டுமல்ல, அவற்றின் மைலேஜும் சிறப்பாக உள்ளது. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தரும். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.62,862.
Hero Splendor Plus
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ், மைலேஜுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.75,141 எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில், ஸ்பிளெண்டர் பிளஸ் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜை வழங்குகிறது.
Honda Shine 100
அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியலில் ஹோண்டா ஷைனும் இடம் பிடித்துள்ளது. இந்த ஹோண்டா பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.64,900.