அதிர்ச்சி… தமிழ்நாட்டில தமிழ்ல பேசினது ஒரு குத்தமாடா…. ஆசிரியை காதை பிடித்து திருகியதில் மாணவனுக்கு கிழிந்த காது சவ்வு…!
இதனை மீறி தமிழில் பேசுபவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்ப அபராதம், அடி, சராமாரியான திட்டு, பெற்றோரிடம் புகார் என விதவிதமான தண்டணைகளும் உண்டு. தமிழ்நாட்டில தமிழ்ல்ல.. பேசினா தண்டனையா என்றால் ஆமாம் அது தான் உண்மை. அந்த வகையில் சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு அரும் தனியார் பள்ளியில் வகுப்பறையில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் தமிழில் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை நாயகி மாணவனை அருகில அழைத்து காதை பிடித்து திருகியுள்ளார். மாணவன் வலியால் அலறித் துடித்தான். வகுப்பில் இருந்த மற்ற சக மாணவர்கள் பீதியுடன் இதனை பார்த்திருந்தனர். ஆசிரியர் நாயகி மாணவனின் காதை பிடித்து திருகியதும் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறை நடவடிக்கை எடுக்கும் முன்பே பெற்றோர் ஆத்திரத்தில் ஆசிரியரை தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.