அதிர்ச்சி… கதறிய திருமாவளவன்… விசிக மாநாட்டிலிருந்து திரும்பிய போது கோர விபத்து… 3 தொண்டர்கள் பலி… 20க்கும் மேற்பட்டோர் காயம்!
இந்நிலையில், இன்று அதிகாலை, மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த ஊர் நோக்கி தொண்டர்கள் திரும்பி கொண்டிருக்கும் நிலையில், திருச்சியை அடுத்த அரியலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அதிகாலை தொண்டர்கள் சென்று கொண்டிருந்த வேன், பயங்கர வேகத்தில் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நேற்று, ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் வாகனங்களில் திருச்சிக்கு வந்திருந்தனர். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
மாநாடு முடிந்த நிலையில் தொண்டர்கள் தங்கள் வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் ஒரு வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அரியலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நாரையூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் வந்த வேன் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேன் முற்றிலும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பயணித்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்த அங்கு சென்ற வேப்பூர் போலீஸார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வேனில் இருந்தவர்களை மீட்டு விருத்தாசலம் மற்றும் தொப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.