கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த அமைச்சர்.. இலங்கை அரசியலில் பெரும் பதற்றம்..!

கந்தானை பொலிஸ் பிரிவில் அதிகாலை 2 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) அமைச்சரின் வாகனம் கொள்கலன் ட்ரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொள்கலன் வாகனத்துடன் மோதிய பின்னர், நிசாந்த, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் அவர்கள் பயணித்த கார் வீதி வேலியில் மோதியது. அவர்கள் அனைவரும் படுகாயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. அரச அமைச்சர் மற்றும் பொலீஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாகனத்தின் ஓட்டுநர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்து குறித்து கந்தானை பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நிஷாந்த, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் முக்கிய அரசியல்வாதி ஆவார். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *