ஒரே வாரத்தில் உங்கள் முகம் தங்கம் போல ஜொலி ஜொலிக்க பெஸ்ட் மாய்ஸ்சரைசர்… எப்படி செய்வது..??

பொதுவாகவே நாம் எல்லோரும் ஆரோக்கியமான சருமத்தை தான் விரும்புவோம். ஏனெனில் சருமம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாம் எப்போதும் இளமையாகவும், அழகாகவும் இருக்க முடியும். இருப்பினும் குளிர் காலங்களில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது பெரும் சவாலாகவே இருக்கும். ஏனெனில் குளிர்ந்த காற்றால் சருமம் வறண்டு போகும்.

இதனால் நாம் பலவிதமான கிரீம்களை பயன்படுத்துகிறோம். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஆயுர்வேத முறைப்படி நாம் நெய்யை பயன்படுத்தில் க்ரீன் தயாரிக்கலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நெய்யை 100 முறை கழுவிய எடுத்து முடிவில் கிடைக்கும் கிரீமை முகத்தில் தடவி இருக்கிறார்கள். அதன் பெயர் ‘ஷதா தெளத க்ரிதா’. தற்போது இது கடைகளில் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதை நாம் நம்முடைய வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை குறித்து இங்கே பார்க்கலாம்.

ஷதா தெளத க்ரிதா தயாரிக்க தேவையான பொருட்கள்:
நெய் – 50 கிராம்
தட்டையான எஃகு பாத்திரம் – 1
குளிர்ந்த சுத்தமான தண்ணீர் – 100 மில்லி
பெரிய கரண்டி – 1

செய்முறை:

இதை செய்ய முதலில் தட்டையான எஃகு பாத்திரத்தில் நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும்
பிறகு அதில் எடுத்து வைத்த குளிர்ந்த நீரை சேர்க்க வேண்டும்
இவற்றை நீங்கள் பெரிய கரண்டியை பயன்படுத்தி, வட்ட வடிவில் 100 முறை நன்கு கலக்க வேண்டும்
க்ரீம் பதத்திற்கு வந்தவுடன் அவற்றை ஒரு கண்ணாடி ஜாடியில் எடுத்து வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: நீங்கள் வாங்கும் நெய் போலியானதா? உண்மையானதா..? கண்டுபிடிக்க ஒரு நிமிஷம் போதும்! எப்படி தெரியுமா?

எப்படி பயன்படுத்த வேண்டும்?

உங்கள் முகத்தை நன்கு கழுவிய பின்னரே இந்த மைசரேஸ்வரி பயன்படுத்த வேண்டும்.
இதனை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
இந்த கிரீமை நீங்கள் இரண்டு வாரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஷதா தெளத க்ரிதா நன்மைகள்:

இது உங்கள் தோளில் இருக்கும் அனைத்து அடுக்குகளையும் ஆழமாக ஹைட்ரேட் செய்கிறது மேலும் இது உங்கள் சருமத்தை ஊட்டமாகவும் பல பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

இது முதுமை அடைவது எதிர்த்துப் போராடும். குறிப்பாக உங்கள் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும், சுருக்கங்கள் இல்லாமலும் வைத்திருக்கும்.

ஷதா தெளத க்ரிதா உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் இயற்கையான சன் ஸ்கிரீனாகவும் பயன்படுகிறது. இது உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. இதனால் நீங்கள் இரவும் பகல் பிரகாசமாக இருக்கலாம்.

ஷதா தெளத க்ரிதா ஒரு அற்புதமான கண்கிரீம் ஆகவும் செயல்படுகிறது இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கத்தை தணிக்கிறது மற்றும் குறைக்கிறது மேலும் இது வெயிலின் தீக்காயுங்கள் மற்றும் வடுக்களை குணப்படுத்தவும் உதவிக்கிறது உங்கள் சருமத்தை நன்றாகவும் அழகாகவும் மாற்றும்.

ஷதா தெளத க்ரிதாவின் காலம் அச்ச பாரம்பரியத்தில் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு தோள் பராமரிப்பு ஆகும். மேலும் அழகு மற்றும் தோல் ஆரோக்கியத்தின் ஆரோக்கியத்திற்கான ரகசியம் இது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *