Fighter BoxOffice: பான் இந்தியா லெவலில் மிரட்டல்… 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த ஃபைட்டர்!
சென்னை: இந்தியில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் 25ம் தேதி வெளியானது.
ஆக்ஷன் ஜானரில் வெளியான இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். பாலிவுட் மட்டுமின்றி பான் இந்தியா லெவலில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள ஃபைட்டர், இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஃபைட்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்தியில் 2024ம் ஆண்டின் மிகப் பெரிய படமாக ஃபைட்டர் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு இறுதியில் ரன்பீர் கபூரின் அனிமல், ஷாருக்கானின் டங்கி படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து 2024 பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் கணக்கை ஃபைட்டர் திரைப்படம் தொடங்கி வைத்துள்ளது. அதன்படி, ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ள ஃபைட்டர், 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் படு மிரட்டலாக உருவாகியுள்ளது. கடந்தாண்டு ஜனவரி 25ல் வெளியான ஷாருக்கானின் பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். ஷாருக்கான் சீக்ரெட் ஏஜென்ட்டாக நடிக்க, அவருடன் சல்மான் கானும் கேமியோ ரோலில் களமிறங்கி ஆக்ஷன் ட்ரீட் கொடுத்திருந்தார். அதேபோல், இன்னொரு தரமான சம்பவமாக அமைந்துள்ளது ஃபைட்டர்..
மிரட்டலான கிராபிக்ஸ், ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ஃபைட்டர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எடுத்துள்ளார் சித்தார்த் ஆனந்த். முதல் நாளில்யே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற ஃபைட்டர் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டி வருகிறதாம். அதன்படி முதல் நாளில் இந்தப் படம் 36 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், இரண்டாவது நாளான நேற்று ஃபைட்டர் படத்தின் வசூல் அப்படியே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாம். இந்த தகவலின் அடிப்படையில் ஃபைட்டர் இரண்டாவது நாள் வசூல் 65 கோடி என சினிமா ட்ராக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் இந்தாண்டு முதல் 100 கோடி கலெக்ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஃபைட்டர் முதல் இரண்டு நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் ஃபைட்டர் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.