இதுகதை அல்ல நிஜம்! 19 ஆண்டுகளுக்கு பிறகு TikTok மீண்டும் இணைந்த இரட்டை சகோதரிகள்..!!
கிழக்கு ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவில் இரட்டை சகோதரிகளின் நிஜ வாழ்க்கை கதை திரை படத்தின் கதையை போல் ஒத்திருக்கிறது. Amy Khvitia மற்றும் Ano Sartania, ஒரே மாதிரியான இரட்டையர்கள்.
எமிக்கு 12 வயது இருக்கும் போது தனக்குப் பிடித்தமான “ஜார்ஜியா’ஸ் காட் டேலண்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று நடனமாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி தன்னை போலவே இருந்தது. அது தனது இழந்த சகோதரி என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
மறுபுறம், அனோ ஒரு TikTok வீடியோவை பார்த்து கொண்டிருக்கும் போது அதில் ஒரு பெண் அவளைப் போலவே இருந்தார். நம்புவதற்கு கடினமாக இருந்தது. ஆனால் வீடியோவில் உள்ள பெண் வேறு யாருமல்ல, அனோவின் இரட்டை சகோதரி எமி.
TikTok வீடியோ மூலம் சந்தித்த இரட்டையர்கள்:
உண்மையில், இருவரும் 2002 இல் பிறந்தபோது, அவர்களின் தாய் சில பிரச்சனைகளால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். மேலும் அவர்களின் தந்தை இரு சகோதரிகளையும் வெவ்வேறு குடும்பங்களுக்கு வழங்கினார். அனோ திபிலிசியில் வளர்ந்தார், எமி ஜுக்டிடியில் வளர்ந்தார். இந்த உலகில் தங்களுக்கு இரட்டை சகோதரி இருப்பதை அவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை.
ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இருவரும் 11 வயதில் ஒரே நடனப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அங்கும், இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தை பலர் கவனித்திருக்கிறார்கள். ஆனால் யாரும் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இரட்டை சகோதரிகள்: அமியும் அனோவும் தங்களுடைய ஒரே மாதிரியான சகோதரி ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பதை அறியாமல் தங்கள் தனி வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆனால் இந்த TikTok வீடியோ மற்றும் அவர்களின் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றியிருந்தது.
எதற்காகப் பிரிந்தார்கள் என்ற கேள்விக்கான பதிலை இருவரும் தேடத் தொடங்கியபோது, ஒரு அதிர்ச்சியான உண்மை தெரிய வந்தது. ஜோர்ஜியாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் திருடப்பட்டு, விற்கப்பட்டது. அதில் இரட்டை சகோதரிகளும் இருந்தனர்.இந்த நிலைமையானது 2005 வரை தொடர்ந்தது.
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசியில் உள்ள ருஸ்டாவேலி பாலத்தில் எமியும் அனோவும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். சுமார்,19 வருடங்கள் பிரிந்து இருந்த அவர்களது முதல் சந்திப்பு அது. இது சாதாரண சந்திப்பு அல்ல, மீண்டும் இரண்டு இரட்டை சகோதரிகளின் சந்திப்பு இது. சகோதரிகள் இருவரும் முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்த அந்த மகிழ்ச்சியான தருணத்தை வர்ணிக்க வார்த்தையில்லை.