#BREAKING : தமிழகத்தில் முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி..!
நெல்லை, தென்காசி மாவட்ட நாதக நிர்வாகிகளுடன் சீமான் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்பு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்துள்ளார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
முன்னதாக, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.