3 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்த பாக்., கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்!
சானியா மிர்சாவுடனான விவாகரத்துக்கு முன்னதாக 3 ஆண்டுகளாகவே ஷோயப் மாலிக் நடிகை சனா ஜாவேத்துடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஷோயப் மாலிக் – சனா ஜாவேத்தின் திருமண புகைப்படங்கள் வெளியான பின் தான், சோயப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்தது தெரிய வந்தது. சானியா மிர்சாவின் பிரிவுக்கு, ஷோயப் மாலிக்கின் திருமணத்தை மீறிய உறவே காரணம் என்று அவரது சகோதரி வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
இந்நிலையில் சோயப் மாலிக் – சனா ஜாவேத் உறவு குறித்து பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சியான சாமா டிவி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத், உமைர் ஜாஸ்வாலை திருமணம் செய்த 2020ஆம் ஆண்டே ஷோயப் மாலிக்குடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மாலிக் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட போதெல்லாம், நடிகை சனா பங்கேற்றால் மட்டுமே தான் வருவேன் என்று நிபந்தனை விதித்திருந்தாராம். ஷோயப் மாலிக் உடனான சனா ஜாவேத்தின் உறவு குறித்து அறிந்த அவரது முன்னாள் கணவர் உமைர் ஜாஸ்வால் 2023ஆம் ஆண்டில் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இருவரின் உறவு குறித்து சானியா மிர்சா, மற்றும் ஷோயப் மாலிக் குடும்பத்தினருக்கு தெரியவந்தபோது அவர்கள் திருத்த முயன்றதாகவும், ஆனால் சோயப் மாலிக் யார் சொல்லியும் கேட்கவில்லை என்றும் பாட்கேஸ்ட் சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது