ராஷ்மிக்காவை தொடர்ந்து மீண்டும் ஒரு டீப் பேக் சோகம்… பிரபல பாடகிக்கு நடந்த சோகம்..!
உலகளவில் பிரபல இசைக்கலைஞராக திகழ்ந்து வரும் டைலர் ஷிப்ட் எனும் பாடகியின் முகத்தை கொண்டு சமீபத்தில் ட்விட்டரில் பகிரப்பட்டு வரும் DeepFake AI புகைப்படங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிக வக்கிரமான அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான முறையில் அவை உருவாக்கி பகிரப்பட்டுள்ளன. இதை சிலர் மேலும், டவுன்லோட் செய்து பகிர்ந்து வந்தாலும், டைலர் ஷிப்ட்-ன் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் கோபத்தையும், எதிர்வினை கருத்துகளையும் பெற்று வருகிறது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், டெய்லரின் பாலியல் படங்கள் செலிப் ஜிஹாத் என்ற இணையதளத்தால் உருவாக்கப்பட்டன, இது ஏ-லிஸ்டர்களின் பல போலியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள Deep Fake ஆபாச தளமாகும். இந்த படங்கள் இணையதளத்தில் ஜனவரி 15 அன்று ‘டெய்லர் ஸ்விஃப்ட் சீஃப்ஸ் செக்ஸ் ஸ்கேன்டல் கேட் ஆன் கேமரா’ என்ற தலைப்பில் பகிரப்பட்டது.
மேலும் சில நெட்டிசென்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் புகைப்படங்களை ரிப்போர்ட் செய்தும் வருகின்றன . அதில் ஒரு ரசிகர் அணைத்து டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகர்களும் இதுபோன்ற புகைப்பட தளங்களை ரிப்போர்ட் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்