இன்று புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை..!

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று புதுச்சேரி வருகை தருகிறார்.புதுச்சேரி பல்கலைகழகம் செல்லும் அவர் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்குகிறார்.

இதனை தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமம் மற்றும் மணக்குல விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு சென்று நடராஜனை தரிசனம் செய்கிறார்.

இந்நிலையில் புதுச்சேரியில் துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *