பவதாரிணிக்கு கண்ணீர்மல்க பிரியாவிடை : பாட்டு பாடி வழியனுப்பி வைத்த இளையராஜா குடும்பத்தினர்..!

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, கொழும்பில் இருந்து அவரது உடல் தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது உடல், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பவதாரிணியின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும், ஏராளமான பொதுமக்கள் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பவதாரிணியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பவதாரணியின் உடலுக்கு உறவினர்களும், ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின், லோயர் கேம்ப் பகுதியில் பவதாரிணியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பவதாரிணியின் உடலை சகோதரர்கள் சுமந்து சென்றனர்.பவதாரிணி குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு இறுதிச் சடங்கு செய்த போது… ‘பாரதி’ படத்தில் அவர் பாடிய தேசிய விருது பாடலான, ‘மயில் போல பொண்ணு ஒன்னு… குயில் போல பாட்டு ஒன்னு என்கிற பாடலை பாடி, பவதாரணியின் இறுதிச் சடங்கை நிறைவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *