கட்டடங்களுக்கு தரமான ‘வெதரிங் கோர்ஸ்’ தேர்வு செய்வதற்கு எளிய வழிமுறைகள்!
புதிய கட்டடம் கட்டுவோர் அதில் ஒவ்வொரு பகுதியின் தரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவர். கட்டடம் நீண்ட காலம் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இந்த வழிமுறை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பலரும் இதில் அடிப்படை கட்டுமானங்கள் மீது மட்டுமே கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். கட்டடத்தின் அனைத்து பாகங்களையும் சமமாக நினைத்து தர ஆய்வில் ஈடுபட வேண்டும். இதில், துாண்கள், பீம்கள், மேல் தளம் உறுதியாக இருக்க வேண்டியது மிக அவசியம். தேர்வு செய்வதற்கு எளிய வழிமுறைகள்!அதே நேரத்தில் கட்டடத்தின் சுவர்கள், ஜன்னல் சன்ஷேட்கள், வாயில் படிகள், வடிகால் அமைப்புகள் வெப்பம் அதிகரிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது.
இதற்கு தீர்வாக வெதரிங் கோர்ஸ் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். தற்போது ஏராளமான நிறுவனங்கள் இதற்கான சேவையை அளிக்க முன்வருகின்றன. உங்கள் கட்டடத்துக்கு வெதரிங் கோர்ஸ் எனப்படும் வெப்பத்தடுப்பு வசதி செய்யும் போது, அது கோடை காலத்துக்கு மட்டும் பயன்பட்டால் போதும் என்று நினைக்காதீர்கள்.கோடைக்கு பின் வரும் மழைக்காலத்திலும் கட்டடத்தில் நீர்க்கசிவை தடுக்க அது எந்த வகையில் உதவும் என்று பாருங்கள். கட்டடத்தின் மேல்தளத்தின் வெளிப்பகுதியானது, மழை, வெயில் இரண்டையும் நேரடியாக எதிர்கொள்கிறது.
ஒரு வீட்டின் கூரை மற்றும் சுவர்களில் ஏற்பட்டிருப்பது வெளி பூச்சில் ஏற்பட்ட வெடிப்பா அல்லது கான்கிரீட்டில் ஏற்பட்ட வெடிப்பா, துளைகளா கான்கிரீட்டில் இருக்கும் நுண்குழாய்களா அல்லது ஜாயிண்டுகளில் உள்ள வெற்றிடங்களா என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும். கான்கிரீட்டில் உள்ள போரோசிட்டி அதாவது புரசல் தன்மையையும் கேபிலரி கபிலிட்டி என்ற நுண்குழாய்களின் தடத்தில் தண்ணீர் புகுவதா? என்று ஆராய்ந்து அவற்றை சரி செய்வதற்கான கலவைகள் மற்றும் சேர்க்கைகள் போன்றவற்றைக் கொண்டு பொருத்தமான பூச்சுகளை பயன்படுத்தி இவற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இதில் வெப்பத்தடுப்பு மட்டும் போதும் என்று நினைப்பது முழுமையானதாக இருக்காது.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் வெதரிங் கோர்ஸ், மழைக்காலத்தில் ஓதம், கசிவு ஆகியவற்றையும் தடுக்க உதவ வேண்டும். பெரும்பாலான வெதரிங் கோர்ஸ் பொருட்கள், மெக்னீசியம், சிலிகா, எரிசாம்பல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. இதில் பாலிமர் அடிப்படையிலான நார் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள். மேலும், நீங்கள் பயன்படுத்தும் வெதரிங் கோர்ஸ் பி.ஐ.எஸ்., தரச்சான்று பெறப்பட்டதா என்று பாருங்கள்.
கலவை பூச்சு போன்று பயன்படுத்துவதா, பதிகற்கள் முறையில் பயன்படுத்துவதா என்பதை முதலிலேயே தெளிவுபடுத்துங்கள். இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.தேர்வு செய்வதற்கு எளிய வழிமுறைகள்!கவனத்திற்கு…சிமென்ட், இபாக்ஸி, பியு. அக்ரிலிக் ஜுல்ஸ் மற்றும் கோட்டிங்குகள் கொண்டு இந்த இன்ஜெக் ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். விரிசலின் அளவைப் பொறுத்து இந்த பொருட்களின் அளவும் மாறுபடுகிறதுபொதுவாக நீர் கசிவுகளை சரி செய்ய இன்ஜெக் ஷன் ட்ரீட்மென்ட் முறை மிகவும் நல்ல பலனை கொடுக்கும். இந்த இன்ஜெக் ஷன் முறை முடிந்த பின், கடைசியாக கோட்டிங் சிஸ்டம் மூலம் இந்த வாட்டர் ப்ரூப்பிங் முறையை முழுமையாக செய்கின்றனர்.