பிப்ரவரி மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட 11 நாட்கள் வங்கிகள் இயங்காது..!
வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.
பொதுமக்கள் தங்களது வரவு – செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.
அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. பிப்ரவரி மாதத்தில் சுமார் 11 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாத வங்கி விடுமுறை பட்டியல்:
பிப்ரவரி 4, 2024 – ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 10, 2024 – சனிக்கிழமை – இரண்டாவது சனிக்கிழமை
பிப்ரவரி 11, 2024 – ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 14, 2024 – புதன்கிழமை – வசந்த பஞ்சமி அல்லது சரஸ்வதி பூஜை (திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்கம்)
பிப்ரவரி 15, 2024 – வியாழக்கிழமை – லுய் நாயகி நிக் திருவிழா / நாகா பழங்குடியினரின் அறுவடை திருவிழா (மணிப்பூர்)
பிப்ரவரி 18, 2024 – ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 19, 2024 – திங்கட்கிழமை – சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் (மகாராஷ்டிரா)
பிப்ரவரி 20, 2024 – செவ்வாய்க்கிழமை – மாநில தினம் (மிசோரம், அருணாச்சல பிரதேசம்)
பிப்ரவரி 24, 2024 – சனிக்கிழமை – 4வது சனிக்கிழமை
பிப்ரவரி 25, 2024 – ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 26, 2024 – திங்கட்கிழமை – நியோகம் திருவிழா (அருணாச்சல பிரதேசம்)