தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பா.ஜ.க..!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. கூட்டணி குறித்த பேச்சுகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகளை மறைமுகமாக அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களை பா.ஜ.க நியமித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:
தமிழகத்திற்கு அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சத்யகுமார், அருணாசலபிரதேசத்திற்கு அசோக் சிங்கால், பீகாருக்கு வினோத்தாவ்டே, தீபக்பிரகாஷ் எம்.பி. ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிகருக்கு விஜய்பாய்ரூபனி எம்.எல்.ஏ., டாமன்-டையூவிற்கு புர்னேஷ் மோடி எம் எல்.ஏ., துஷ்யந்த்பட்டேல் கோவாவிற்கு ஆஷிஷ்சூட், அரியானாவிற்கு பிப்லாப்குமார் தேவ் எம்.பி., சுரேந்திரசிங் நாகர் எம்.பி. இமாசல பிரதேசத்திற்கு ஸ்ரீகாந்த் சர்மா, சஞ்சய் தாண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு தரூண் ஷுக், ஆஷிஸ்சூட், லடாக்கிற்கு தருண் ஷுக், ஜார்க்கண்டிற்கு லட்சுமிகாந்த் பாஜ்பாய், கர்நாடகாவிற்கு ராதாமோகன்தாஸ் அகர்வால் எம்.பி., சுதாகர் ரெட்டி, கேரளாவிற்கு பிரகாஷ் ஜவடேகர், லட்சத்தீவிற்கு அரவிந்த் மேனன், மத்திய பிரதேசத்திற்கு மகேந்திரகுமார் சிங், சதீஷ் உபாத்யாய நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒடிசாவிற்கு விஜய்பால் சிங் தோமர் எம்.பி, லதா உசேந்தி எம்.எல்.ஏ., புதுச்சேரிக்கு நிர்மல்குமார் சுரானா, பஞ்சாப்புக்கு விஜய்பாய் ரூபானி எம்.எல்.ஏ, நரேந்திரசிங், சிக்கிமிற்கு திலீப் ஜெய்ச்வால், உத்தர பிரதேசத்திற்கு பாய்ஜெயந்த் ஜெய்பாண்டே, உத்தரகாண்டிற்கு துஷ்யந்த்குமார் கவுதம், மேற்கு வங்கத்திற்கு மங்கல்பாண்டே, அமித் மல்வியா, ஆஷா லக்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.