அயோத்தி ராமர் கோயிலுக்கு முகத்தை மறைத்துக்கொண்டு வந்த பிரபல நடிகர்… யார் தெரியுமா?

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது ஏராளமான நடிகர்கள் வந்திருந்தனர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சினிமா உலகின் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அதன்படி ரஜினிகாந்த், ஹேமா மாலினி, அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சென்றிருந்தனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அனுபம் கெர் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் மறுநாள் சாதாரண பக்தர்களைப் போல கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் முகத்தை மூடிக்கொண்டு மக்கள் கூட்டத்தில் நின்றிருந்தார். அதனால் மக்கள் அவரை அடையாளம் காண முடியவில்லை.

இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்ற வீடியோவை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அனுபம் கெர் வீடியோவுடன் கூடிய தலைப்பில், ‘தயவுசெய்து இறுதிவரை பாருங்கள். ராமர் கோவிலுக்கு அழைக்கப்பட்ட விருந்தினராக சென்றிருந்தேன்! ஆனால் இன்று எல்லோருடனும் அமைதியாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. அப்படியொரு பக்தி கடலைக் கண்டு என் உள்ளம் பொங்கியது, என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அனுபம்கெர் இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் நடிப்பில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் நிறைய சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *