பப்பாளியை ‘இப்படி’ சாப்பிட்டால்… உடல் பருமனுக்கு பை-பை சொல்லலாம்!
பப்பாளியை உணவில் சேர்ப்பது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. பப்பாளியில் காணப்படும் பல சத்துக்கள் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. பப்பாளியில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளதால், உடலில் சேரும் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கிறது. வயிறு கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட வேண்டும். பல மணிநேரம் ஜிம்மில் ஈடுபடும் அதே பலனை பப்பாளியை டயட்டில் சேர்ப்பதன் மூலம் பெறலாம். எடை இழப்புக்கு பழங்களில் பப்பாளியை விட சிறந்தது எதுவுமில்லை. எடை இழப்புக்கு இது சிறந்த பழமாக கருதப்படுகிறது. இருப்பினும், உடல் பருனை குறைக்க சரியான நேரத்தில் மற்றும் சரியான வகையில் பப்பாளியை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
பப்பாளியில் உள்ள ஊட்டசத்துக்கள்
தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான காலை உணவு பற்றி சிந்திக்கும் நபர்களுக்கு பப்பாளி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியமும் பப்பாளி பழத்தில் நிறைந்துள்ளது. பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காலை உணவில் பப்பாளி கட்டாயம் இருக்க வேண்டும்
உடல் பருமனை குறைக்க,
தினமும் காலை உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு ஏராளமான ஆற்றலை வழங்குவதோடு, படிப்படியாக அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும். பப்பாளியை துண்டுகளாக நறுக்கி காலை உணவாக சாப்பிடுங்கள். சுவையை அதிகரிக்க, கருப்பு உப்பு, சாட் மசாலா மற்றும் கருப்பு மிளகு சேர்த்து பப்பாளியை சாப்பிடலாம்.
பப்பாளி சாறு குடிக்கவும்
உடல் எடையை குறைக்க, உங்கள் உணவில் பப்பாளி சாற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளி ஜூஸ் குடிப்பதால் உடலில் சேரும் கொழுப்பு குறையும். பப்பாளியில் உள்ள சத்துக்கள் உடல் கொழுப்பைக் குறைத்து பிட்னஸை மேம்படுத்த உதவுகிறது. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பப்பாளியை கட்டாயம் சாப்பிட வேண்டும். பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கும் குட்பை சொல்லலாம்.