பீன்ஸ் பொரியலை இப்படி செஞ்சி கொடுத்து பாருங்க… குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.!

பீன்ஸ் பொரியல், கலோரி குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் உள்ள சுவை மிகுந்த ஒரு ஆரோக்கியமான உணவாகும். மேலும் பீன்ஸ் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

அதிலும் பீன்ஸ் பொரியலை செய்வது மிகவும் எளிதும் கூட. அதிலும் மதிய வேளையில் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான்.

ஆனால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே குழந்தைகளுக்கு பிடித்தவாறு எப்படி பீன்ஸ் பொரியலை எளிமையான முறையில் செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பீன்ஸ் – 250 கிராம்

பெரிய வெங்காயம் – 1

துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப

கொத்தமல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1/4 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கருவேப்பிலை – தேவைக்கேற்ப

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அதில் காய்ந்த மிளகாய், உளுந்து, கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

இவை நன்கு பொன்னிறமாக மாறியவுடன் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

தேங்காய் உட்பட அனைத்தும் நன்றாக பொன்னிறமாக வறுப்பட்டவுடன் அடுப்பை அனைத்து ஆற விடவும்.

அவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு உங்களுக்கு தேவைப்பட்டால் 1/2 டீஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து அனைத்தையும் கொரகொரவென்று அரைத்து எடுத்து தனியாக வைத்துகொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் சீரகம் சேர்த்துக்கொள்ளவும்.

அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் நன்றாக வெந்தவுடன் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.

பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து மூடி போட்டு பீன்ஸ் மென்மையாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.

பீன்ஸ் நன்றாக வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து ஒரு நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விட்டு இறக்கினால் சுவையான பீன்ஸ் பொரியல் தயார்…

இதை நீங்கள் சாம்பார், காரக்குழம்பு, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *