விவகாரமான படம்.. பெயரை கெடுத்துக்கொண்ட சதா.. மொத்த மார்க்கெட்டும் போச்சு!
இந்த திரைப்படத்தின் மூலமாக தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டார் சதா. அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், விக்ரமுடன் அன்னியன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த படத்திலும், அம்சமான குடும்பப்பெண்ணாக நடித்திருந்தார்.
கிளாமரில் இறங்கிய சதா: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சதா, கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரில் இறங்கி கவர்ச்சியை தாராளமாகவே காட்டத்தொடங்கினார். மார்க்கெட் சுத்தமாக குறைந்துபோனதால், எலி என்ற படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்தார். அதுகூட பரவாய் இல்லை என்று சொல்லும் அளவிற்கு, டார்ச் லைட் என்ற விவகாரமான படத்தில் விலைமாதுவாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு இவரின் இமேஜ் மொத்தமாக டேமேஜ் ஆகி விட்டது. என்ன சதா இந்த மாதிரி படத்துல எல்லாம் நடிக்கிறீங்க என்று இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.
மும்பையில் பிசினஸ்: நடிகை சதா மும்பையில் Earthlings cafe நடத்தி வருகிறார். லாபகரமாக சென்றுக் கொண்டிருந்த அந்த எர்த்லிங்ஸ் கஃபேவை மூடப் போகிறேன் என நடிகை சதா சமீபத்தில் லைவ் வீடியோ ஒன்றில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதன் பிறகு ரசிகர்கள் கொடுத்த ஆதரவால், கஃபே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.