டிக்கெட் விலை இவ்வளவு கம்மியா? வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த கப்பலில் போயிடனும்!
டைட்டானிக் கப்பலை விட மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள ஐகான் ஆப் சீஸ் என்ற சொகுசு கப்பல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து தற்போது தனது பயணத்தை துவங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய கப்பலாக ஏகப்பட்ட சொகுசு வசதிகள் கொண்ட கப்பலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகிலேயே மிகப்பெரிய கப்பலாக கருதப்பட்ட கப்பல் டைட்டானிக் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் தனது முதல் பயணத்திலேயே பணிப்பாறையின் மீது மோதி கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் உலகையே உலுக்கி போட்ட மிகப்பெரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியான திரைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.
இந்த கப்பலை தொடர்ந்து தற்போது அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரீபியன் என்ற நிறுவனம் டைட்டானிக்கை விட மிகப்பெரிய கப்பல் ஒன்றை தற்போது தயாரித்துள்ளது. இந்த கப்பலுக்கு “ஐகான் ஆப் சீஸ்” என பெயர் வைத்துள்ளது. இந்த கப்பல் சுமார் 1200 அடி நீளம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் தான் எடை கொண்ட இந்த கப்பல் உலகின் மிகப்பெரிய கப்பலாக உள்ளது.
இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டு பல்வேறு முறை சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது முதன்முறையாக இந்த கப்பல் பயன்பாட்டுக்கு வருகிறது என்று இந்த கப்பல் புளோரிடா மாகாணத்தில் இருந்து புறப்பட்டு வெப்பமண்டல பகுதியை சுற்றி வருகிறது. இந்தக் கப்பலில் மொத்தம் 10 ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2350 பேர் கப்பல் பணியாற்று ஊழியர்களாகவும் 7600 பேர் கப்பலில் உள்ள பயணிகளாகவும் இருப்பார்கள்.
இந்த கப்பலில் மொத்தம் 28 விதமான அறைகள் உள்ளன மொத்தம் 20 ஃப்ளோர்கள் கொண்டதாக இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கான கேளிக்கைக்காக 6 நீர் சறுக்குகள், ஏ7 நீச்சல் குளங்கள், ஒரு பணி சிறக்க வளையம் ஒரு தியேட்டர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்த கப்பலில் இடம் பெற்றுள்ளன.
இந்த கப்பலில் உள்ள பயணிகளை மகிழ்விப்பதற்காக சுமார் 17,000 சதுர அடி கொண்ட வாட்டர் பார்க் ஒன்று இதில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் நீர் சறுக்குகள் எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த கப்பலில் 82 அடி உயர டோம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் கப்பலுக்கு உள்ளே இருந்தே வெளியில் உள்ள விஷயங்களை பார்க்கும் படி ரம்மியமான வியூ கிடைக்கும் படி இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் உள்ள பயணிகளை மகிழ்விப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட இசை வல்லுநர்கள் மற்றும் காமெடி செய்யும் நபர்கள் கப்பலில் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது ஷோ நடத்தி பயணிகளை மகிழ்விப்பார்கள். இதுபோக இந்த கப்பலில் பயணிகளுக்கான கேளிக்கை நிகழ்ச்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கப்பல் மொத்தம் ஏழு நாள் பயணம் செல்கிறது.
இந்த கப்பலை கட்டுமானம் செய்யும் போது மற்ற கப்பல்களை விட குறைவான அளவில் கார்பன் எமிஷன் ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைக்க விளைவிக்காத வகையில் இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டுமானத்தை ஒரு இன்ஜினியரிங் மார்வெல் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சிறப்பான கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.