யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை: சந்தானம் விளக்கம்

சென்னை:சந்தானம் நடித்துள்ள ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம், “2 இயக்குனர்களின் படங்களில் எந்த கேள்வியும் கேட்காமல் நடிப்பேன்.ஒருவர் பிரேம் ஆனந்த், மற்றொருவர் படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி.

ஏனென்றால் படத்தில் நகைச்சுவை அதிகம்.இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்துக்குப் பிறகு எனக்கு இன்னொரு ஹிட் தேவை.கார்த்திக் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி.படத்தில் ஒரு விஷயம் சர்ச்சையானது.

ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்றால் நானும், இயக்குனரும் கவுண்டமணியின் ரசிகர்கள்.‘டிகிலோனா’ என்பது அவரது டயலாக்.இது வடக்குப்பட்டி ராமசாமி என்ற கவுண்டமணியின் வசனம்.

உங்களை சிரிக்க வைக்க சினிமாவுக்கு வந்தேன்.மற்றபடி யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.கடவுளுக்கு தெரியும்.நான் பணத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றால், நான் சென்றிருப்பேன்.அடுத்து புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதே நோக்கம்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *