சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்!
சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்! சைனஸ் பிரச்சனை தற்பொழுது பெரும்பாலானோரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது.
குறிப்பாக பனிக்காலத்தில் பலர் இந்த பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.
சைனஸ் ஏன் உண்டாகிறது?
குளிர்ச்சியான பானங்களை அருந்துதல், அதிகமாக வெந்நீரில் குளித்தல், அதிக மாசு அடைந்த காற்றை சுவாசித்தல், இரவில் குளிர்ச்சியான நீரில் தலைக்கு குளித்தல், குக்கரில் சமைத்த உணவுகள் சாப்பிடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
சைனஸ் அறிகுறி:-
மேல் தாடை மற்றும் கீழ் தாடைகள் இணையும் பகுதியில் வலி, முகத்தில் வலி, மூக்கைச் சுற்றி வலியை, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி, வாய் மற்றும் நாசியில் சுவாசிக்கும் போது சுவாசத்தில் நாற்றம் ஏற்படுதல், காது மடலில் வலி உள்ளிட்டவைகள் சைனஸ் அறிகுறி ஆகும்.
சைனஸ் பாதிப்பை குணமாக்கும் வீட்டு வைத்தியம்…
தேவையான பொருட்கள்:-
*அதிமதுரம்
*கண்டங்கத்திரி
*சித்தரத்தை
*ஆடாதோடை
*தாளிசப்பத்திரி
*திப்பிலி
செய்முறை…
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அடுத்து அரைத்த பொடி 1 தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி அருந்தவும். இவ்வாறு தொடர்ந்து அருந்தி வந்தால் சைனஸ், வறட்டு இருமல், மூச்சிரைப்பு மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.