ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கியது..! வெளியான அதிர்ச்சி தகவல்!
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமீப காலத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்த ஈமணி நவீன் (வயது 23) பட்டதாரியான இவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி சித்தரிப்பு வீடியோவை வெளியிட்டது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது, சமூக வலைதளத்தில் தன்னை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்ற வீடியோவை பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வீடியோவால் ஏற்பட்ட பிரச்சனையால் சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நவீன் ராஷ்மிகாவின் ரசிகர் பக்கத்தை நடத்தி வந்துள்ளார்.
அதில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தன் விருப்ப நாயகியான முகத்தை போலியாக சித்தரித்து டீப் ஃபேக் வீடியோவை ராஷ்மிகாவின் ரசிகரே உருவாக்கியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.