தகாத உறவால் வாழ்க்கையை இழந்த ஸ்ரீவித்யா.. உண்மையை உடைத்த பிரபலம்!

ர்நாடக இசை பாடகி எம் எஸ் வசந்தகுமாரியின் மகள் நடிகை ஸ்ரீவித்யா. இவர் 1970 முதல் 2000 வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடக்கத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் அம்மா கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களுடையே மிகவும் பிரபலமானார்.

இதனிடையே 1976 ஆம் ஆண்டு தனது பெற்றோர் பார்த்து வைத்த ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அடுத்த சில வருடங்களிலேயே அவரை விவாகரத்தும் செய்து கொண்டார். இந்த நிலையில் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை சீரழிந்தது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, நடிகை ஸ்ரீ வித்யாவின் அம்மா பிரபல பாடகி என்பதால் நிறைய பணம் வைத்திருந்தவர். அதனால் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரே மகள் ஸ்ரீவித்யா. ஆனால் ஸ்ரீவித்யா சினிமாவில் கால்தடம் பதித்த பிறகு சில தகாத உறவுகளால் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இதனால் பலத்த ஏமாற்றமடைந்தார்.

மேலும், அவரது சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட கணவர் ஸ்ரீவித்யாவின் மொத்த சொத்தையும் அழித்தார். அதன் பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடைசி காலத்தில் பணமில்லாமல் வறுமையில் வாடி இறந்ததாக கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *