இதை தெரிஞ்சிக்கோங்க..! சகல காரியசித்தி அளிக்கும் பகவானின் நாமாக்கள்..!

அம்புப் படுக்கையில் படுத்திருந்த பிதாமகர் பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் திருமாலின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயமே விஷ்ணு சஹஸ்ரநாமம்.

‘ஸஹஸ்ரம்’ என்றால் ஆயிரம். ‘நாமம்’ என்றால் பெயர். ஆண்டவனுடைய ‘அனந்த- கல்யாண- குணங்களை’, பற்பலவிதமாக எடுத்துரைத்துக் களிப்பதே சஹஸ்ர நாமத்திலுள்ள 1008 பெயர்களைக் கொண்ட ஸ்லோகங்கள். ஒவ்வொரு பெயரும் ஒரு நற்குணத்தை கொண்டுள்ளது.

விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் அனைத்து ஸ்லோகங்களுமே நமக்கு மேன்மையை கொடுக்கக்கூடியது என்றாலும் சகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்.

படிப்பில் வல்லவனாக:-

வேதோ வேதவிதவ்யங்கோ

வேதாங்கோ வேதவித் கவி:

வயிற்று வலி நீங்க:

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா

ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:

உற்சாகம் ஏற்பட:

அதீந்த்ரியோ மஹாமாயோ

மஹோத்ஸாஹோ மஹாபல:

ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:

மஹா புத்திர் மகாவீர்யோ

மகாசக்திர் மஹாத்யுதி:

கண்பார்வை தெளிவுபெற:

ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா

ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

பெருமதிப்பு ஏற்பட:

ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்

ஜஹ்நுர் நாராயணோநர:

எண்ணிய காரியம் நிறைவேற:

ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:

ஸித்தித: ஸித்தி ஸாதன:

கல்யாணம் நடக்க:

காமஹா காமக்ருத் காந்த:

காம: காமப்ரத: ப்ரபு:

உயர்ந்த பதவி ஏற்பட:

வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:

ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:

மரண பயம் நீங்க:

வைகுண்ட: புருஷ: ப்ராண:

ப்ராணத: ப்ரணவ: ப்ருது:

அழியாச் செல்வம் ஏற்பட:

அர்த்தோநர்த்தோ மஹாகோசோ

மஹாபோகோ மஹாதந:

நல்ல புத்தி ஏற்பட:

ஸர்வதர்சீ விமுக்தாத்மா

ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்

சுகம் உண்டாக:

ஆநந்தோ நந்தநோ நந்த:

ஸத்யதர்மா த்ரிவிக்ரம:

க்ஷேமம் உண்டாக:

அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா

ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:

துன்பங்கள் தொலைய:

பூசயோ பூஷணோ பூதிர்

விசோக: சோகநாசன:

வியாதிகள் நீங்க:

பூர்ண: பூரயிதா புண்ய:

புண்யகீர்த்தி ரநாமய:

மோக்ஷமடைய:

சத்கதி: சத்க்ருதி: ஸத்தா

ஸத்பூதி: ஸத்பராயண:

சத்ருவை ஜெயிக்க:

ஸுலப: ஸுவ்ருத: ஸித்த:

சத்ருஜிச் சத்ருதாபன:

ஆபத்து விலக:

அமூர்த்திரநகோ சிந்த்யோ

பயக்ருத் பயநாசந:

மங்களம் பெருக:

ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி

ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:

துர்சொப்பனம் நீங்க:

உத்தாரணோ துஷ்க்ருதிஹா

புண்யோ துஸ்ஸ்வப்நநாசந:

பாபங்கள் நீங்க:

தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா

க்ஷிதீச: பாபநாசந:

அனுதினமும் அகில உலகை ரட்சிக்கும் பகவானின் திருநாமங்களை பாராயணம் செய்து பலன் பெறுவோம்.

ஓம் நமோ நாராயணாய!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *