பவதாரணி செய்த சின்ன மிஸ்டேக்.. விஷமாக மாறியது.. தப்பி தவறியும் இதை பண்ணிடாதீங்க மக்களே
சென்னை: இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணியின் மறைவு திரை உலகை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நேற்று அவருடைய இறுதி சடங்கு நடந்து முடிந்தது. ஆனாலும் கடந்த மூன்று தினங்களாக அவர் குறித்து செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இளையராஜாவின் செல்ல மகளாகவும் பண வசதியில் குறைவில்லாமல் இருந்தாலும் பவதாரிணிக்கு நான்காவது ஸ்டேஜ் வரைக்கும் புற்றுநோய் இருப்பதே தெரியாமல் இருந்திருக்கிறது. அதற்கு காரணம் அவர் செய்த சின்ன சின்ன மிஸ்டேக் தான். அதனால் இனி யாரும் அது போன்ற தவறுகளை அலட்சியமாக செய்து விடாதீங்க என்பதுதான் இந்த செய்தியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
அமைதியான சுபாவத்தை கொண்ட பவதாரிணியின் பாடல்கள் பலருடைய சோகத்தை கரைத்து மனதை லேசாக்க கூடியது. பவதாரிணி இசை வாரிசாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் பாடுவதற்கு பெரிய அளவில் அவருடைய தந்தை சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். ஆனாலும் அதற்குப் பிறகு அவருடைய திறமையை பார்த்து திரைப்படங்களில் பாடுவதற்கு இளையராஜா சம்மதித்திருக்கிறார்.
வீட்டில் செல்ல பிள்ளையாக இருந்த பவதாரிணி தன்னுடைய அப்பா மற்றும் அண்ணன்களுக்கு இடையே அன்பு பாலமாகவும் இருந்திருக்கிறார். தன்னுடைய அண்ணன்கள் அப்பாவிடம் எது பேச வேண்டும் என்றாலும் பவதாரிணியிடம் சொல்லித்தான் சம்மதம் வாங்குவார்களாம். அப்படி ஒரு செல்லப் பிள்ளையாக இருந்த பவதாரிணிக்கு சில வருடங்களுக்கு முன்பே கணையத்தில் கல்லடைப்பு இருந்திருக்கிறது.
பிறகு அதற்கு ஆபரேஷன் செய்து அதை நீக்கி இருக்கிறார்கள். அதற்கு பிறகு சில நேரங்களில் அவருக்கு வயிறு வலி வந்திருக்கிறது. வயிறு வலி வரும்போது அவர் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சில மருந்து மாத்திரைகளை எடுத்து இருக்கிறார். அது அந்த நேரத்திற்கு தீர்வு தந்தாலும் உள்ளிருந்த புற்று நோயை வேகமாக வளர செய்து இருக்கிறது. உடல் எடை குறைந்த போதும் கூட பவதாரணி அது குறித்து பெரியதாக வெளியே காட்டிக்காமல் இருந்திருக்கிறார்.
நமக்கு எதுவும் நடக்காது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருப்பது போலத்தான் பவதாரிணியும் நம்பி இருக்கிறார். அதனால் தான் தனக்கு வந்த சின்ன சின்ன வலி வேதனைகளை கூட அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்து மாத்திரைகளை எடுத்து அதை குறைந்தது அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார். கடைசியில் ரொம்பவும் முடியாமல் ஆன போது தான் பவதாரிணிக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்திற்கு புற்றுநோயில் நான்காவது கட்டத்தில் பவதாரணி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.