‘பீகாரில் பாஜகவுக்கு 2 துணை முதல்வர்கள்’.. யார் அவர்கள் தெரியுமா? இன்றே முதல்வராகும் நிதிஷ் குமார்!
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை இன்று காலையில் நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜக ஆதரவோடு இன்று மாலை 5 மணிக்கு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் அவருடன் பாஜகவின் 2 தலைவர்கள் துணை முதல்வராகவும் பொறுப்பு ஏற்க உள்ளனர்.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் நிதிஷ் குமாரின் ஜேடியூ மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்டது. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தேர்தல் முடிவு வெளியான நிலையில் பாஜக 74 தொகுதிகளில், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றது. இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 72 தொகுதிகளிலும் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்று இருந்தது. இதையடுத்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஜேடியூவின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வரானார்.
இந்த கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகள் வரை நடந்தது. 2022ல் திடீரென்று நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். முதல்வர் பதவியை தன்னிடம் இருந்து பாஜக பறிக்க திட்டமிட்டதாக குற்றம்சாட்டி அவர் கூட்டணியை முறித்தார். அதேவேளையில் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் நிதிஷ் குமார் முதல்வரானார்.