ஏர்போர்ட்டில் இலவசமாக ஓய்விடம் கிடைக்கனுமா? ரொம்ப ஈஸி.. இந்த ஒரு கார்டு இருந்தா போதும்!
சென்னை: கிரெடிட் கார்டுகள் நாம் சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்தினால் நமக்கு அதிகளவு நன்மைகளை தரக்கூடியவை.
கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள் அவற்றுடன் பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்குகின்றன. ரிவார்டு பாய்ண்ட்ஸ், கேஷ் பேக் சலுகைகள், தள்ளுபடிகள் என நீள்கிறது இந்த பட்டியல். இதில் பெரும்பாலானவர்கள் கவனிக்க தவறுவது விமான நிலையங்களில் கிடைக்க கூடிய சலுகைகள்.விமான நிலையங்களில் சலுகையா?: குறிப்பிட்ட வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இலவசமாக விமான நிலைய ஓய்வறைகளை பெற முடியும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.கிரெடிட் கார்டு வைத்திருந்தும் தண்டமாக செலவு செய்து விட்டு வருவோம்.
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர் என்றால் அதில் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை உடனடியாக படித்து தெரிந்து கொண்டு , அதன் அதிகபட்ச நன்மைகளை அனுபவியுங்கள். எந்தெந்த கிரெடிட் கார்டுகள் விமான நிலையங்களில் அன்லிமிடெட் ஓய்வறை அணுகல்களை வழங்குகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம். ஹெச்டிஎஃப்சி: டைனர்ஸ் கிளப் பிளாக் மெடல் எடிசன் கிரெடிட் கார்டு . ஹெச்டிஎஃசி வங்கி வழங்கும் இந்த கிரெடிட் கார்டு மூலம் , நீங்கள் இலவசமாக விமான நிலைய ஓய்வறைகளை பயன்படுத்தலாம். ஓராண்டுக்கு இத்தனை முறை தான் பயன்படுத்த வேண்டும் என்ற வரம்பு கிடையாது என்பதால் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வோருக்கு உகந்தது இது. அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைம்,ஸ்விக்கி ஒன் ஆகியவற்றுக்கான சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது. எஸ்பிஐ கார்டு: எஸ்பிஐ கார்டு பிரைம். ரிவார்டு பாய்ண்ட்ஸ் போன்ற பல அம்சங்களை கொண்டது. உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளை இந்த கார்டினை பயன்படுத்தி ஒரு ஆண்டில் 8 முறை இலவசமாக பயன்படுத்தலாம்.
சர்வதேச முன்னுரிமை ஓய்வறைகளை ஒரு வருடத்திற்கு 4 முறை இலவசமாக அணுகலாம். ஒரு காலாண்டில் இந்த கார்டில் ரூ.50,000 செலவு செய்தால் ரூ1,000 வவுச்சர் கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி : ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள். இந்த கார்டுகளில் ஒரு காலாண்டில் ரூ.5,000 பயன்படுத்தினால் அடுத்த காலாண்டில் ஒருமுறை விமான நிலைய ஓய்வறையை இலவசமாக பயன்படுத்தலாம். இதுவே எமரால்டு கிரெடி கார்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் ஓய்வறைகளை கணக்கே இல்லாமல் பயன்படுத்தலாம்.