சரிப்பட்டு வரமாட்டீங்க தம்பி. அப்படியே கிளம்புங்க; மீண்டும் சொதப்பிய சுப்மன் கில்; கடுப்பான ரசிகர்கள் !!
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார்.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ஜடேஜா 87 ரன்களும், கே.எல் ராகுல் 86 ரன்களும், ஜெய்ஸ்வால் 80 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்துவிட்டு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஓலி போப் 196 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த சுப்மன் கில் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இந்தநிலையில், முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சுப்மன் கில் தனது பங்களிப்பை செய்ய தவறி வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் சுப்மன் கில்லை சமூக வலைதளங்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.