“உண்மையில ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. வெஸ்ட் இண்டீஸ் வேற ஐடியா வச்சிருந்திருக்காங்க” – கம்மின்ஸ் பேச்சு

ஆஸ்திரேலியா அணி கடந்த 39 டெஸ்ட் போட்டிகளில் உள்நாட்டில் இந்திய அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது.
தற்பொழுது இந்திய அணி இருந்த இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் சேர்ந்து இருக்கிறது.
27 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் தனது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். மேலும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எந்த அணிகளும் வீழ்த்தியதில்லை என்கின்ற வரலாற்றை வெஸ்ட் இண்டீஸ் மாற்றி அமைத்து இருக்கிறது.
இந்த தொடருக்கு வரும் பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படி ஒரு வெற்றியை ஈட்டும் என்று யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடிய இளம் வீரர்கள் இவ்வளவு போராட்ட குணத்தை வெளிப்படுத்தவார்கள் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள் எடுக்க, அடுத்து ஆஸ்திரேலியா 289 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதற்கு அடுத்து தொடர்ச்சியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
216 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா இறுதியில் 27 ரன்கள் மட்டும் எடுத்து 8 தங்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் தோல்வி அடைந்தது. இறுதிவரை களத்தில் நின்ற ஸ்மித் போராடி 90 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் பெற்றுள்ள இந்த வெற்றி அவர்களது தேய்ந்திருக்கும் கிரிக்கெட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வர உதவும்.