வாக்கர் யூனுஸ், அக்தருக்கு நிகரானவர் பும்ரா.. ரிவர்ஸ் ஸ்விங்கில் மிரள வைக்கிறார்.. தினேஷ் கார்த்திக்

ஐதராபாத் : பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர்களான வாக்கர் யூனுஸ், சோயப் அக்தர் ஆகியோருக்கு நிகரான திறமையை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா கொண்டுள்ளதாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் இந்திய அணி பவுலர்கள் வீழ்த்தியுள்ள நிலையில், 14 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களும், 6 விக்கெட்டுகளையும் பும்ராவும் வீழ்த்தினர். வெளிநாட்டு ஆடுகளங்களில் பும்ரா சிறப்பாக செயல்பட்டாலும், இந்திய மண்ணில் பெரும்பாலும் ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்.

இதன் காரணமாக பும்ராவுக்கு உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு வழங்கப்படும். ஆனால் இந்த போட்டியின் மூலமாக இந்திய மண்ணிலும் பும்ரா விக்கெட் வீழ்த்த முடியும் என்று நிரூபித்துள்ளார். அதிலும் பந்து ரிவர்ஸ் ஆக தொடங்கியதும் பும்ராவின் பவுலிங் மிரட்டலாக அமைந்தது. இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், எந்த வீரரையும் ஜாம்பவான், கிரேட் என்று கூறும் போது கவனமாக இருப்பேன். அவ்வளவு எளிதாக யாரையும் கிரேட் என்று பாராட்ட மாட்டேன்.

ஆனால் சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் என்ற பும்ராவை அழைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எதிரணியின் முக்கியமான வீரரின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்றால், பும்ராவில் கையில் தான் ஒரு கேப்டன் பந்தை கொடுக்க வேண்டும். அவரிடம், சிறந்த வீரருக்கு நான் பவுலிங் செய்கிறேன் என்று எண்ணமும், சவாலும் எப்போதும் இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங்கை பொறுத்தவரை பந்தை பிட்ச் செய்து பேட்ஸ்மேனுக்கு கொண்டு வரும் திறனில் சிராஜ் போன்ற வீரர்கள் வல்லவர்கள்.

ஆனால் பும்ரா இரு பக்கமும் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார். அதிலும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் செய்து பந்தை வெளியில் எடுத்து செல்கிறார். அது சாதாரண விஷயம் கிடையாது. பாகிஸ்தான் ஜாம்பவான்களான பும்ரா, வாக்கர் யூனுஸ் உள்ளிட்ட சிலர் தான் அதுபோல் செய்திருக்கிறார்கள். அதிலும் எப்போதும் வீசும் அதே வேகத்தில் ஒரு பக்கமும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதெல்லாம் எல்லோராலும் முடியாத விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *