கர்ப்பமாக இருக்கும் நிலையில் குட்டை டவுசரில் பாறை மீது அமர்ந்து யோகா செய்யும் அமலா பால்! வைரலாகும் வீடியோ.!
மலையாள நடிகையான அமலா பால், மைனா படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக மாறினார். பின்னர் ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சமீப காலமாக பட வாய்ப்புகள் சரிவர அமையாமல் தவித்து வந்த நிலையில்… பட தயாரிப்பிலும் இறங்கினார்.
ஏற்கனவே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலா பால், விவாகரத்து பெற்று 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இதை தொடர்ந்து, சமீபத்தில்… ஜகத் தேசாய் என்பவரின் காதலை ஏற்று கொண்டு, ஒரே வாரத்தில் அவரை அவசர அவசரமாக திருமணமும் செய்து கொண்டார்.
திருமணமான ஒரே மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த அமலா பால், தற்போது 5 மாதம் கர்ப்பமான இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததால் தான் அவசர அவரசமாக திருமணம் செய்து கொண்டார் என்கிற தகவலும் வெளியானது. இந்நிலையில் அமலா பால் தன்னுடைய கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது மருத்துவரின் அறிவுரை படி ஒரு பாறை மீது அமர்ந்து உடல்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கர்ப்ப காலத்தில் இந்த மலசானா யோகம் செய்வதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்வதாகவும் இது இடுப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மந்திரம் போல் செயல்படுவதாக அமலாபால் கூறியுள்ளார். அதேபோல் நீண்ட கடற்கரையில் நடைபயிற்சி செய்வது, வெறுங்காலுடன் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது, கர்ப்ப குமட்டலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனது கால்கள் மணலையும் உப்பு நீரையும் தொடும் போது அதை ஒரு அதிசய மருத்துவ குணமாக நான் பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த யோகாவை செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் தனது கணவர் தனக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பதாகவும் என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன் என்றும் அந்த பதிவில் அமலா பால் கூறியுள்ளார்.