டெஸ்ட் மேட்சா ஆடுற.. பாபர் அசாமை கிண்டல் செய்த விக்கெட் கீப்பர்.. அப்புறம் நடந்தது பாருங்க டிவிஸ்ட்
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் மற்றும் துரண்டோ டாக்கா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம், ராங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.
டாஸ் வென்ற துரண்டோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக பிராண்டின் கிங் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினர். அப்போது வழக்கம்போல் பாபர் அசாம் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்துகளில் 37 ரன்கள் அவர் சேர்த்தார். அப்போது எதிரணியின் விக்கெட் கீப்பர் இர்பான் சுக்குர், பாபர் அசாமிடம் வம்பிழுத்தார்.
“இது ஒன்றும் டெஸ்ட் மேட்ச் கிடையாது, டி20 போட்டி நினைவு வைத்துக் கொள்ளுங்கள் பாபர் என்று கூறினார். இதனால் கடுப்பான பாபர் அசாம், நான் உன்னிடம் எதுவுமே பேசவில்லை. ஏன் தேவையில்லாமல் என்னை வம்பு இழுக்கிறாய் என்று கோபமாக திட்டினார். இதனை அடுத்து நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
அதன் பிறகு அதிரடி காட்டிய பாபர் அசாம் பவுண்டரிகளை பறக்க விட்டார். இதன் காரணமாக 46 பந்துகளில் பாபர் அசாம் 62 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.இறுதியில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய் 15 பந்துகளின் 32 ரன்கள் எடுக்க ராங்க்பூர் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.
இதனை எடுத்து களம் இறங்கிய துராண்டோ டாக்கா அணியில் அலெக்ஸ் ராஸ் மட்டும் அரை சதம் அடிக்க மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால் அந்த அணி 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் சாதாரண வீரராக தான் களமிறங்கினார். களத்தில் அமைதியாக நடந்து கொள்ளும் பாபர் அசாம், இன்று கோபத்தில் உச்சத்திற்கு சென்று தன்னுடைய பேட்டிங்கில் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.