நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ. அசத்தல் அறிவிப்பு.!!!
இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. சீன ரயில் தயாரிப்பு நிறுவனத்திடம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் 300 பயணிகளை ஏற்றி செல்லும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம், சென்சார்கள் பாதை நிலை மற்றும் போக்குவரத்து நிலை போன்றவற்றை கண்காணித்து ரயில் தானாகவே இயங்கும் என்றும் இதன் மூலமாக நகரப் போக்குவரத்து மேம்படும் என்றும் தெரிவித்துள்ளது.