அனிமல், கங்குவா வில்லன்.. செல்ஃபி எடுக்கிறேன்னு கிஸ் பண்ண ரசிகை.. இவர் தான் நேஷ்னல் கிரஷ்!
மும்பை: ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் நல்ல படமா இல்லையா என்கிற பெரிய விவாதமே வலைத்தளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வாரம் தியேட்டரில் வெளியான சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை பார்ப்பதை விட அதிக ஆர்வமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள அனிமல் படத்தை பார்த்து அது குறித்த பதிவுகளை போட்டு வருகின்றனர்.
நடிகை ராதிகா சரத்குமார், பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் சமீபத்தில் அனிமல் படத்தை பார்த்துவிட்டு அந்தப் படத்தை கழுவி ஊற்றி இருந்தனர். தெலுங்கு மற்றும் இந்தி சினிமா ரசிகர்கள் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படத்தை ஓடிடியில் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
பெண்களை இழிவுபடுத்தி: ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்றும் ஆண்களால் தான் பழிவாங்க முடியும் என்றும் ரன்பீர் கபூர் பேசும் வசனங்கள் நிர்வாணமாக தனது தோட்டத்தில் அனைவரும் பார்க்கும்படி நடந்து வரும் காட்சிகள், வேறு ஒருவருடன் நிச்சயம் செய்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவை விமானத்தில் அழைத்துச் சென்று அவருடன் உடலுறவு கொள்வது, இடைவேளைக்குப் பிறகு இன்னொரு ஹீரோயினுடன் படுக்கையை பகிர்வது என ரன்பீர் கபூர் சந்தீப் ரெட்டி வங்கா உருவாக்கிய கதாபாத்திரத்தில் எந்த ஒரு தலையீடும் இன்றி நடித்துக் கொடுத்திருக்கிறார்.
அனிமல் வில்லன்: ஒரு பக்கம் ரன்பீர் கபூர் முதல் பாதியை மிரட்ட இரண்டாம் பாதியில் என்ட்ரி கொடுக்கும் அப்ரார் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல் ராஷ்மிகாவை ஓவர் டேக் செய்து விட்டு திடீரென நேஷனல் கிரஷ் ஆகிவிட்டார். அனிமல் படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்துள்ள பாபி தியோல் இரண்டு மனைவிகளை வைத்துக்கொண்டு மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யும் காட்சியில் அறிமுகமாகிறார்.
திருமணத்தின் போதே தனது தம்பி இறந்துவிட்ட செய்தியை கூறும் நபரை கொடூரமாக கொல்கிறார். அந்த ரத்த கரையை கூட துடைக்காமல் புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் அந்த இடத்திலேயே உறவு கொள்கிறார் என ஹாலிவுட் படங்களில் கூட இந்த அளவுக்கு போல்டான காட்சிகள் இடம் பெற்றிருக்குமா என்ற கேள்வியுடன் இந்த படத்தை சந்திப் ரெட்டி வங்கா உருவாக்கி இருக்கிறார்.