இதுவே எனக்கு போதும்..காதலனை நினைத்து உருகும் பிரியா பவானி சங்கர்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கார்த்தி, அருண் விஜய், எஸ் ஜே சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர், தனது காதலன் பிறந்த நாளுக்கு, வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமான இவர், அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற, வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு ஓடியது. இதையடுத்து கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் எஸ் . ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாபியா, ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
கைவசம் உள்ள படம்: தற்போது, பிரியா பவானி ஷங்கர், சீனியர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். தற்போது இவர் கைவசம் இந்தியன் 2, ஜிப்ரா, ரத்னம், பீமா, டிமாண்டி காலனி 2 போன்ற படங்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.
காதலுனுக்கு பிறந்த நாள்: பிரியா பவானி ஷங்கர் என்னத்தான் படங்களில் பிசியாக நடித்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது காதலன் ராஜவேலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த பையன் இருக்கிறாரே இவர்தான் என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே சிரிக்கிறோம், சண்டை இடுகிறோம், அழுவோம்.