தங்கை கால்களை பிடித்து எப்படி நக பாலிஷ் போடுறாரு பாருங்க.. சாய் பல்லவி சிஸ்டர் செம ஹேப்பி!
சென்னை: நடிகை சாய் பல்லவியின் தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், நிச்சயதார்த்தத்துக்கு தனது தங்கையை ரெடி பண்ண மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களை எல்லாம் அழைக்காமல் அவரே கால் விரல்கள் முதல் அனைத்து இடங்களுக்கும் மேக்கப் போட்டு அழகு படுத்தும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் நிலையில், அடுத்து பாலிவுட் படத்தில் சீதையாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி விரைவில் அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். சாய் பல்லவியின் சகோதரியான பூஜா கண்ணன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நிலையில், சினிமாவில் தொடராமல் தனது காதலருடன் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
தங்கை நிச்சயதார்த்தம்: ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் படத்தில் சமுத்திரகனியின் மகளாக பூஜா கண்ணன் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகமானார். அந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்த பூஜா கண்ணன் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார்.
காதலருடன் கல்யாணத்துக்கு ரெடி: முதல் படத்துடன் சினிமா எல்லாம் நமக்கு செட் ஆகாது. அதையெல்லாம் அக்காவே பார்த்துக் கொள்ளட்டும் என நினைத்த பூஜா கண்ணன் தனது காதலர் வினீத் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். நிச்சயதார்த்தத்தில் இருவரும் செய்த கலாட்டா மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என அனைத்தும் லைக்குகளை அள்ளி உள்ளன.