Rachitha mahalakshmi: ‘பிக்பாஸூக்குள்ள போனா மட்டும்’ – ரச்சிதா பளார் பேட்டி!

பிரபல நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் வாயிலாக பிரபலமானவருமான ரச்சிதா தற்போது ‘Xtreme’ எனும் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்திற்கான பூஜை இன்று நடந்தது.

அதில் கலந்து கொண்டு பேசிய ரச்சிதா, “நான் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாகவே நான் பல சீரியல்களில் நடித்திருக்கிறேன்.

இப்போது இந்தப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலே நமக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் பொய். பிக்பாஸ் நம்முடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு பெரிய தளம்.

அதில் நம் திறமைகளை பார்த்து மக்கள் நமக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பார்கள். அதைப் பார்த்து இயக்குநர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். இதுவரை என்னுடைய சீரியல்கள் மூலமாகவே எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது” என்று பேசினார்.

முன்னதாக, விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக அறிமுகம் ஆனவர், நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அப்போது அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

இருவரும் ஒருவருக்கொருவர் மனதார காதலித்து இருவீட்டாரின் அனுமதியோடு திருமணம் செய்து கொண்டு, தத்தம் கேரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதன்படி, ரச்சிதா மகாலட்சுமி சரவணன் – மீனாட்சி தொடரில் நடிக்கத்தொடங்கினார். அவருக்கென்று ஒரு தனி ஃபேன் பேஸ் உருவானது.

அதைத் தொடர்ந்து ரியல் ஜோடி இருவரும் இணைந்து, ஜீ தமிழில் நாச்சியார்புரம் சீரியலில் ரீல் ஜோடியாக நடிக்கத் தொடங்கினர். பின் கோவிட் 19 சூழலால் பாதியிலேயே அந்த சீரியல் கைவிடப்பட்டது. பின், 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர். இதனையடுத்து தினேஷ் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *