SAC on Vijay: “விஜய் நடிக்கலைனாலும் அந்தப் படம் சூப்பர் ஹிட் தான்..” மேடையில் ஓபனாக பேசிய SAC
சென்னை: தேசிங்கு ராஜா 2ம் பாகம் பட விழாவில் விஜய்யின் அப்பாவும் முன்னணி இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் லோகேஷ் கனகராஜ் குறித்து மறைமுகமாக விமர்சித்தது வைரலாகியுள்ளது. அதே நிகழ்ச்சியில், விஜய்யின் இன்னொரு படம் பற்றியும் SAC பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய்யை டைரக்ட்டாக அட்டாக் செய்த SAC
விமல் நடிப்பில் எழில் இயக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி இயக்குநரும் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் இயக்குநர் எழிலுக்காக தான் இந்த விழாவில் பங்கேற்க வந்தேன் எனக் கூறினார். அதேபோல் தேசிங்கு ராஜா 2 ஹீரோ விமலையும் அவர் பாராட்டியிருந்தார்.
முன்னதாக இப்போதுள்ள இயக்குநர்களுக்கு விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை என்று வெளிப்படையாகவே கூறினார். அதாவது, “சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்… உடனே இயக்குநருக்கு போன் போட்டு முதல் பாதி அருமையாக இருக்கிறது என பாராட்டினேன். அதனை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அந்த இயக்குநர், இரண்டாம் பாதி அவ்வளவு சிறப்பாக இல்லை என்றதும் அவர் என்னிடம் பேச விரும்பவில்லை.
ஒரு தகப்பனே தவறான மத நம்பிக்கையால் தனது பிள்ளையை அப்படியெல்லாம் பலி கொடுக்க விரும்ப மாட்டான்னு சொன்னேன். உடனே அந்த இயக்குநர் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் சார் என சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இதுவரை திரும்ப கூப்பிடவே இல்லை. நான் சொன்ன அந்த சீனை ரசிகர்களே வச்சு செய்தார்கள்” என கூறியிருந்தார். அது லோகேஷ் தான் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
அதேபோல் விஜய்யின் கேரியரில் 10 படங்கள் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தன. அதில் துள்ளாத மனம் துள்ளும் படமும் ஒன்று. அந்தப் படத்தின் கதையை கேட்டதுமே விஜய்யின் கால்ஷீட் கொடுத்துவிட்டேன், அந்தளவுக்கு திரைக்கதை நன்றாக இருந்தது. அதனால் தான் துள்ளாத மனமும் துள்ளும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அப்போது விஜய் என்ன சூப்பர் ஸ்டார் நடிகரா… அதெல்லாம் கிடையாது.
அந்தப் படத்தின் கதையும் திரைக்கதையும் தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஓபனாக சொல்ல வேண்டும் என்றால் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய் நடிக்காமல் வேறு எந்த ஹீரோ நடித்திருந்தாலும் சூப்பர் ஹிட்டாகிருக்கும். அதுதான் ஒரு படத்தின் உண்மையான வெற்றி என SAC ஓபனாக பேசினார். மகன் விஜய் குறித்தும் அவரது படங்கள் பற்றியும் அப்பா SAC-யே இவ்வளவு ஓபனாக பேசியது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.