வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் இயற்கை மருத்துவ குறிப்புகள்
* குடல் மற்றும் வயிற்றுப்புண் போன்றவை புகைபிடித்தல், புகையிலை சுவாசித்தல், மது அருந்துதல் போன்றவற்றால் ஏற்படும்.
மேலும் வலி நிவாரண மருந்துகள், மூட்டு வலிக்காக சாப்பிடும் மாத்திரைகள் போன்றவற்றால் வயிற்று புண் மற்றும் குடல் புண் ஏற்படுகிறது.
* பற்களை கடித்தல், வயிறு துளைப்பது போல வலித்தல், எரிச்சலோடு கூட கூடிய வலி போன்றவை குடல் புண் இருப்பதற்கான அறிகுறி. இதனை ஆரம்பத்தில் சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் அல்சர் பிரச்சனை ஏற்படுத்தும்.
* ஆப்பிள் தினமும் எடுத்துக் கொள்வதால் அல்சர் பிரச்சனை வயிற்றுப்புண் பிரச்சனை குணமடையும். ஆப்பிளில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் அல்சரை விரைவில் குணப்படுத்தும். பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும்.
* வயிற்றுப் புண்ணை குணப்படுத்த அகத்திக் கீரையை சுத்தப்படுத்தி அதனுடன் பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து துவரம் பருப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பின்னர் அவற்றை பருகி வந்தால் இரண்டு வாரத்தில் குடல் புண், வயிற்றுப்புண் பிரச்சனை குணமடையும்.