எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தா மஞ்சளை அளவோடு பயன்படுத்தவும்!
மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதத்தில் இது முக்கியமான ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. வலியை போக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால், சில ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதில் மிகுந்த கவனம் தேவை. இதைச் செய்யாவிட்டால், மஞ்சளால் ஏற்படும் பக்கவிளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
மஞ்சள் இல்லாமல் பருப்பு அல்லது காய்கறி சமைக்கவே முடியாது எனலாம். காய்கறிகள் அல்லது பருப்புகளில் மஞ்சள் நிறம் உணவிற்கு ஈர்க்கும் வகையிலான தோற்றத்தை கொடுக்கும். மஞ்சள் ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான மசாலா என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்துகிறது. ஆனால் நன்மைகளுடன், மஞ்சளை உட்கொள்வது சிலருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? அதன் அதிகப்படியான நுகர்வு பல சிக்கல்களை ஏற்படுத்தும். எந்தெந்த சூழ்நிலைகளில் மஞ்சளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
இரத்த சோகை நோயாளிகள்:
இரத்த சோகையால் அவதிப்படுபவர்களும் மஞ்சளை அளவாக உட்கொள்ள வேண்டும். உண்மையில், மஞ்சளை அதிகமாக உட்கொள்வது உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை பாதிக்கிறது. மற்றும் இது இரத்த சோகையை அதிகரிக்கும் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
மஞ்சள் காமாலை நோயாளிகள்:
நீங்கள் மஞ்சள் காமாலை நோயாளியாக இருந்தால், யோசித்த பின்னரே மஞ்சளை உட்கொள்ளுங்கள். பொதுவாக, மஞ்சள் காமாலையின் போது மஞ்சளைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் கேட்கிறார்கள். ஏனெனில் மஞ்சள் அதிகம் சாப்பிடுவதினால் சீரம் பிலிரூபின் அளவு அதிகரிக்கும். எனவே நீங்கள் மஞ்சள் காமாலை நோயாளியாக இருந்தால், அதை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.