ரன்பிர் கபூர் – ஆலியா பட் தம்பதியின் குழந்தை போட்டோ.. உலகுக்கு அறிமுகம் செய்த நட்சத்திர ஜோடி!
பாலிவுட்டில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக இருந்து வரும் ரன்பிர் கபூர் – ஆலியா பட் தம்பதியின் மகள் ராஹா கபூரின் புகைப்படங்கள் முதன்முறையாக வெளிவந்துள்ளன. கிறிஸ்துமஸ் விருந்தையொட்டி, ரன்பிர் கபூர் தனது மகளை அழைத்து வரும் புகைப்படங்கள் இந்தி திரையுலக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
குழந்தை ராஹாவை வாழ்த்தி பல்வேறு பாலிவுட் திரை நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ஒரு வயதாகும் மகள் ராஹாவை ரன்பிர் கபூர் தனது கைகளில் தாங்கியவாறு, மனைவி ஆலியாவும் உடன் இருக்கும் வீடியோ ஒன்று இன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வெள்ளை நிற ஃப்ரோக் ஆடையில் குழந்தை ராஹாவும், ஃப்ளோரல் கருப்பு நிற ஆடையில் ஆலியா பட்டும் வீடியோ ஒன்றில் அழகாக உள்ளனர். ரன்பிர் மற்றும் ஆலியா இடையே கடந்த 2022 ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. அடுத்த 7 மாதத்தில் அதாவது நவம்பரில் இருவருக்கும் மகள் பிறந்தார்.
மகளை ஏன் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தவில்லை என்று ஆலியா பட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘நாங்கள் இப்போதுதான் பெற்றோர் ஆகியுள்ளோம். இங்கு கேமரா மட்டும் இல்லையென்றால் மகளை உங்களுக்கு காண்பிப்பதில் எந்த தயக்கமும் எனக்கு கிடையாது. கேமராவில் நூற்றுக்கணக்கான ஃப்ளாஷ் முகத்தில் படும்போது குழந்தை எந்த மாதிரி ரியாக்ட் செய்யும் என்று எனக்கு தெரியவில்லை. மகளின் படம் இன்டர்நெட்டில் பரவுவது இப்போதைக்கு வேண்டாம் என்று கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
குழந்தை ராஹாவை பார்த்த நெட்டிசன்கள் அவர் தாத்தா ரிஷி கபூரை போல் இருப்பதாக கமென்ட் செய்துள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
ரன்பிர் கபூர் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த அனிமல் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.