ஒரே நேரத்தில் 3 விண்கலங்களை செலுத்தி சாதனை படைத்த ஈரான்.. கலக்கத்தில் மேற்கத்திய நாடுகள்!

மேற்காசிய நாடான ஈரான், ஒரே நேரத்தில் மூன்று விண்கலங்களை விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்தது. இது மேற்கத்திய நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இது தன்னிச்சையாக பல ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சிமோர்க் என்ற ராக்கெட் வாயிலாக, ஈரான் நேற்று 3 விண்கலங்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. தொலை தொடர்பு சேவை மற்றும் ஆராய்ச்சிகளுக்காக இந்த விண்கலங்கள் அனுப்பப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.

தொடர்ந்து 5 முறை நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், இந்த ராக்கெட் வெற்றிகரமாக நேற்று செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரானின் இந்த வெற்றி மேற்கத்திய நாடுகளை கலக்கமடைய செய்துள்ளது.

அணு ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பதற்கான தொழில்நுட்படத்துக்கு இந்த ராக்கெட் தொழில்நுட்பம் உதவும் என்பதே அதற்கு காரணம். இந்த ராக்கெட் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டதை தொடர்ந்து பல அணு ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பில் ஈரான் ஈடுபடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேற்காசியாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இதில் ஈரான் நேரடியாக தலையிடவில்லை. அதே நேரத்தில் ஹவுதி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே தடைகளை மீறி ஈரான் பல ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. தற்போது ராக்கெட் வெற்றியை தொடர்ந்து புதிய ஏவுகணைகள் தயாரிப்பில், ஈரான் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *